அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்...!

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
அந்தியோதயா ரெயிலில் முன்பதிவு பெட்டிகள் நீக்கம்...!
Published on

மதுரை,

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக தாம்பரம் வரை இயக்கப்படும் முற்றிலும் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட அந்தியோதயா வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அனைத்தும் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) புறப்படும் ரெயிலிலும் (வ.எண்.22657), நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயிலில் (வ.எண்.22658) வருகிற 17-ந் தேதி முதல் முன்பதிவு பெட்டிகள் பொதுப்பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

இந்த ரெயிலில் மேற்கண்ட நாட்களில் இருந்து பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com