டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஓர் ஆண்டாக குறைப்பு

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கும் கால அவகாசம் ஓர் ஆண்டாக குறைப்பு
Published on

சென்னை

தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.

இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுதொடர்பாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com