உடுமலை நான்குவழிச்சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு

செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.
உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு
Published on

போடிப்பட்டி,

உடுமலை-பொள்ளாச்சி சாலையில் நான்குவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்விளக்கு ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்பட்டனர். இதனால் அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதுதொடர்பான செய்தி தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்கை சீரமைத்தனர்.

இதனால் செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com