திருப்பூரில் பல்லாங்குழி சாலை சீரமைப்பு

இந்த சாலை குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் அவினாசி ரோடு மேம்பாலத்தை ஒட்டியவாறு கொங்கு மெயின் ரோடு செல்லும் சாலை சேதமடைந்து காணப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சாலையில் சிறிய அளவில் இருந்த குழி கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் தற்போது பெரும் பள்ளமாக மாறியது. இவ்வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் செல்வதாலும், கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதாலும் சாலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது.
இதேபோல் வாகன ஓட்டிகள் பலர் இப்பகுதியில் கீழே விழுந்து காயமடைந்தனர். விபத்து ஏற்படும் வகையில் ஆபத்தான நிலையில் இருந்த இந்த சாலை குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று உடனடியாக சாலையில் இருந்த பள்ளம் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர். மண் கொட்டப்பட்ட இடத்தில் விரைவில் தார்சாலையும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






