புனரமைப்பு பணி: பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம்

புனரமைப்பு பணி காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 24.01.2026 முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் இராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும்.
ராயபுரம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:-
அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18A CUT, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.
ஈ.வே.ரா. சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள்: 50, 101CT, 101X, 53E, 53P, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150
அண்ணாசாலை மற்றும் ஈ.வேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தட பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து இராயபுரம் நோக்கி செல்லும் போது ஏற்கனவே அமைந்துள்ள செவிலியர் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்திலும், வடக்கு கோட்டை சாலையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றம் பேருந்து நிறுத்ததிலும் நின்று பயணிகளை இறக்கி, இராஜாஜி சாலை வழியாக இராயபுரம் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
இராயபுரம் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து ஈ.வே.ரா சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் பாரிஸ் கார்னர் சிக்னல், வடக்கு கோட்டை சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும்.
தீவுத்திடல் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம் பின்வருமாறு:-
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் தடங்கள்: 6, 13, 60E, 102, 109, 1020, 102K, 102P, 102S,102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.
பீச்ஸ் டேசன் வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 1, 4, 44, 33C, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56D ET, 56J, 56K, 56P, 570, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, C56C ET, 557A ET.
மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33B, 56C, 56F.
ஈவேரா சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M,
வேப்பேரி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 35, 42, 242, 142B, 142P, 35C, 428, 420, 42D, 42M, 640, 64K, 64K ET, 7E, 7H, 7K, 7M, 7M ET
பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது பாரிஸ் கார்னர் சிக்னல், North Fort சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள உயர்நீதி மன்றம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
மண்ணடி சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது Esplanade சாலையின் வலதுபுறம் சென்று முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி செல்லும் போது, ஏற்கனவே அமைந்துள்ள Nurse quarters பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி வலது புறம் திரும்பி முத்துசாமி மேம்பாலம் வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திற்கு செல்லும்.
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தத்தம் புறப்படும் இடத்திலிருந்து பாரிஸ் கார்னர் சிக்னல் இடதுபுறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள பாரிஸ் கார்னர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி NSC Bose சாலை, Esplanade சாலை வழியாக தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையம் செல்லும்.
தீவுத்திடல் தற்காலிக பேருந்து முனையத்திலிருந்து பீச்ஸ்டேசன் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்று இடது புறம் திரும்பி Esplande சாலை, NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள ரங்கவிலாஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
ஈ.வே.ரா. சாலை மற்றும் வேப்பேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி ஏற்கனவே அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை(G.H.) பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
காமராஜர் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் முத்துசாமி மேம்பாலம், Esplanade சாலையில் வலதுபுறம் திரும்பி NSC Bose சாலையில் ஏற்கனவே அமைந்துள்ள Dare House பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி மீண்டும் பாரிஸ் கார்னர் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்தில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






