மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் சீரமைப்பு பணி தீவிரம்

மண் மற்றும் மரங்கள் சரிந்து அரசு பஸ்சின் மீது விழுந்ததில் டிரைவர் ஜனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலச்சரிவு சீரமைப்பு பணி தீவிரம்
Published on: 

நீலகிரி,

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சீரமைப்பு பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி-ஊட்டி சாலையில் சுமார் 30 இடங்களில் மரங்கள் விழுந்து பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக பர்லியார் பகுதியில் மண் மற்றும் மரங்கள் சரிந்து அரசு பஸ்சின் மீது விழுந்ததில் டிரைவர் ஜனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக விபத்து நடப்பதற்கு முன் பஸ் டயர் பஞ்சரானதால் அதிலிருந்த பயணிகள் வேறு பஸ்களுக்கு மாற்றப் பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அத்தியாவசிய வாகனங்கள் தவிர அரசு பஸ்கள் உள்பட மற்ற அனைத்து வாகனங்களும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நீலகிரிக்குள் வர தடை விதிக்கப்பட்டது.

பகல் நேரத்தில் கோத்தகிரி வழியாக மட்டும் போக்குவரத்து திறந்து விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தேசியநெடுஞ்சாலைதுறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் மண் சரிவுகளை பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் மீது மண் விழுந்த இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அந்த இடத்திலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தது. ஆனால் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பாறைகள் அந்தரத்தில் உள்ளதால் வாகன போக்குவரத்து தொடங்க தாமதம் ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com