குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

அருவிகளில் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்குள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

அருவிகளில் தற்பொழுது சீராக தண்ணீர் விழுந்து வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகு தியில் உள்ள நடைபாதைகளில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் நடைபெற்றாலும் ஆண்கள் அனைவரும் பெண்கள் குளிக்க செல்லும் பகுதி வழியாக சென்று பின்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பகுதி வழியாக மீண்டும் ஆண்கள் குளிக்கும் பகுதிக்கு வந்து அருவியில் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு 2 நாட்களில் இந்த பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும், சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்குள் பணிகளை முடிக் கும் வகையில் தற்போது மெயின் அருவி பகுதியில் பராம ரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலை நடந்து வந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மிதமாக காணப்பட்டது. அவர்கள் சீராக விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

X