ஊட்டி மலை ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்

மலை ரெயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி மலை ரெயில் பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்
Published on: 

நீலகிரி,

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ந்தேதி இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் ஹில் குரோவ்-குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு பாறாங்கற்கள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன.

மண் சரிந்து ரெயில் பாதையை மூடியது. ரெயில் பாதையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன. இதை தொடர்ந்து மலை ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக நாளை (29-ந்தேதி) வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து குன்னூர் மலை ரெயில் இருப்பு பாதை பிரிவு பொறியாளர் குமார் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணி முடிநத பின்னர் தான் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com