

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு வயது 85. சென்னை அடையாறு ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை தீ அணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காரில் சென்று கொண்டிருந்த கே.ராஜன் திடீரென காரை நிறுத்த சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கி ஆற்றில் குதித்ததாக சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக குடும்பத்தினரை பிரிந்து தனியார் ஹோட்டலில் கே ராஜன் தங்கியிருந்தாக சொல்லப்படுகிறது.
கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் கே ராஜன் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கே ராஜன் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.