பெண்கள் விடுதிகள், முதியோர் இல்லங்களை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மறுசீரமைப்பு

தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பில் ஒரு பிரத்யேக சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட்டு எளிய ஆளுமையின் கீழ் இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பில் ஒரு பிரத்யேக சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பின் (https://www.tnesevai.tn.gov.in/) மூலம் பின்வரும் சேவைகள் தற்போது இணைய வழியில் வெளியிடப்பட்டுள்ளன.
· முதியோர் இல்லங்களைப் பதிவு செய்தல்.
· பெண்களுக்கான இல்லங்கள் பதிவு மற்றும் உரிமம் வழங்குதல்.
· பணிபுரியும் மகளிர் விடுதிக்கான உரிமம் வழங்குதல்.
சமூக நலத்துறையின்கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுடைய உரிமங்கள் காலாவதியாகும் போது புதிய இணையதள நடைமுறையைப் பயன்படுத்தி தங்கள் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களும் கீழ்காணும் நடைமுறையை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
· https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தமிழ்நாடு இ-சேவை இணைய முகப்பை பார்வையிட வேண்டும்.
· தங்கள் பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.
· தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உரிமங்கள் மற்றும் பதிவுகள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பிக்கும் வசதியினை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






