சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சூறைக்காற்றினால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
Published on

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் ஆலோசனையின் படி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், மதுரை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நகராட்சி பணியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 3-வது நாளாக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் மின்வாரிய பணியாளர்கள் சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், மின்மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com