நாளை குடியரசு தினம்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்


நாளை குடியரசு தினம்: சென்னையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 25 Jan 2025 7:41 AM IST (Updated: 25 Jan 2025 9:12 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. எனவே நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் பசுமை வழி சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம், திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வே சென்றடையலாம்.

அதேபோல் அடையாறில் இருந்து வரும் பிற வாகனங்கள், காந்தி சாலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு ராயப்பேட்டை 1-பாயின்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வேக்கு சென்றடையலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயின்ட்டில் இடது அல்லது வலது புறமாகத் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.

மாநகர பஸ்கள் இடது புறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக பிராட்வே சென்றடையும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ்ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுகம் சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை, ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடது அல்லது வலது புறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்களது இலக்கை அடையலாம்.

அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. இதேபோல் பொதுமக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். குடியரசு தினத்தையொட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும்"

இவ்வாறு அதில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி-20 கிரிக்கெட் போட்டி

இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துதுறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

பாரதி சாலை ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜ சாலை வழியாக திருப்பி விடப்படும். பெல்ஸ் சாலையிலிருந்து கண்ணகி சிலை சாலை செல்ல அனுமதில்லை பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை வழியாக பெல்ஸ் சாலை செல்ல அனுமதியில்லை. குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக, நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும்.

வாகன நிறுத்தத்திற்கு அனுமதி வழங்கப்படாத வாகனங்கள், கலைவாணர் அரங்கம், ஓமந்துாரார் மருத்துவக்கல்லுாரி மைதானம், எம்.ஆர்.டி.எஸ்.சேப்பாக்கம், பொதுப்பணித்துறை மைதானம், சுவாமி சிவானந்தம் சாலை ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Live Updates

  • 25 Jan 2025 9:12 AM IST

    வேங்கைவயல் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

  • 25 Jan 2025 9:10 AM IST

    ஆயுத தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மராட்டிய மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

  • 25 Jan 2025 9:09 AM IST

    டி-20 கிரிக்கெட் போட்டி - போக்குவரத்து மாற்றம்

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விக்டோரியா விடுதி சாலைக்கு செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலையிலிருந்து கண்ணகி சிலை சாலை செல்ல அனுமதில்லை பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக, நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும்.


Next Story