மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கேன்டீன்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீண்டும் கேன்டீன் பயன்பாட்டுக்கு வந்தது.
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கேன்டீன்
Published on

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் காவல்துறையினரால் கேன்டீன் செயல்பட்டு வந்தது. சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்கள், போலீசார் இதனை பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன்பு இந்த கேன்டீன் திடீரென மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து இன்று கேன்டீனை அவர் திறந்து வைத்தார்.

இதனை பொதுமக்கள், போலீசார் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மீண்டும் பயன்பாட்டுக்கு கேன்டீன் கொண்டு வரப்பட்டதால் போலீசார் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com