சேதமடைந்த நிழற்குடையை அகற்ற கோரிக்கை

சேதமடைந்த நிழற்குடையை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த நிழற்குடையை அகற்ற கோரிக்கை
Published on

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அலமேலுமங்கைபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த அஞ்சுகின்றனர். இதன் அருகில் தொடக்க பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவர்கள் இந்த வழியாக தான் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்தி விட்டு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com