திருச்செந்தூரில் பைக் டாக்ஸி அனுமதிக்க கோரிக்கை


திருச்செந்தூரில்  பைக் டாக்ஸி அனுமதிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 4 July 2025 12:04 PM IST (Updated: 4 July 2025 12:05 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவிற்காக முழுமையாக தயாராகி வருகிறது . விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்தில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் பல கிலோமீட்டர் முன்னதாகவே நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுவதால் பக்தர்கள் நெடுந்தொலைவு நடக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்டநெரிசலில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது.

முதியவர்கள், குழந்தைகள் ,ஊனமுற்றோர்கள் எளிதாக செல்ல அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பைக் டாக்ஸிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story