சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்ட கோரிக்கை


சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்ட கோரிக்கை
x

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தன் கலைத்திறனால் தமிழினத்துக்கு பெருமை சேர்த்தவரும், காமராஜரின் சீடரும், காங்கிரஸ் கட்சியின் தூணாகத் திகழ்ந்தவரும், கலைஞர் கருணாநிதியின் நண்பராக திகழ்ந்தவருமான சிவாஜி கணேசன், சென்னை தேனாம்பேட்டை சந்திப்பு அருகிலுள்ள தெற்கு போக் சாலை என்று முன்பு அழைக்கப்பட்டு, தற்போது செவாலியே சிவாஜிகணேசன் சாலை என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள அன்னை இல்லத்தில்தான் தன் குடும்பத்தினருடன் இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்.

எனவே சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரைச் சூட்டவேண்டும். அவர் வசித்த இல்லத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் பாலத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்படுவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

தியாகிகள், கலைஞர்கள் என்று அனைவருக்கும் நினைவிடம், சிலை அமைத்து, அவர்களைப் போற்றிடும் நீங்கள், எங்களுடைய கோரிக்கையையும் ஏற்பீர்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story