

சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நெல்லை போக்குவரத்து மண்டல மேலாளர் மகேந்திர குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், "சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரை வரை புதிய பஸ் மற்றும் சங்கரன்கோவிலில் இருந்து தென்காசிக்கு இடைநிறுத்தம் இல்லா ஒன் டூ ஒன் பஸ் மற்றும் சங்கரன்கோவில் - நெல்லை இடையே குளிர்சாதன வசதி கொண்ட பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.