தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் மையம் அமைக்க கோரிக்கை
Published on

தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் முதல் போக நெல் கொள்முதல் செய்ய ஏப்ரல் மாதம் வரை மையம் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் கொள்முதல் மையம் செயல்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த பகுதியில் கோடை பருவத்தில் 700 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே ஒரு சில வயல்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வயல்களிலும் அறுவடை நடைபெறும். இந்நிலையில் தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com