திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்த வேண்டுகோள்

தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மீண்டும் பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்த வேண்டுகோள்
Published on

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்த பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிகாரப்பூர்வ வலைதளம்

திருப்பதி ஏழுமலையானை தரிசக்க வரும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அர்ஜித சேவா டிக்கெட்டுகள், தங்குமிடம் ஆகியவற்றை முன்பதிவு செய்ய https://TTDevasthanam.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு மீண்டும் பக்தர்களை கேட்டுக்கொள்கிறோம். போலி வலைதளங்களை தொடர்பு கொண்டு ஏமாற்றப்பட்ட பக்தர்களிடம் இருந்து பல புகார்கள் பெறப்பட்டு வருகிறோம். அந்தப் புகார்கள் அடிப்படையில் தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, போலி வலைதளங்கள் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வலைதளம் தொடர்பான தகவல் மற்றும் பிற விவரங்களுக்கு தேவஸ்தான அழைப்பு மைய கட்டணமில்லா எண் 155257-யை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் உண்டியல் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 69 ஆயிரத்து 746 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கல்யாணக்கட்டாக்களில் 23 ஆயிரத்து 647 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 27 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com