வட்டங்கள் பிரிப்பது குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்


வட்டங்கள் பிரிப்பது குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
x
தினத்தந்தி 25 March 2025 10:49 AM IST (Updated: 25 March 2025 2:04 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

வட்டங்கள் பிரிப்பது குறித்த அனைத்து கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கடத்தூரை தலைமையிடமாக கொண்டு வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வரப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வட்டங்கள் பிரிப்பது குறித்த அனைத்து கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளன. தகுதியான வட்டங்கள் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story