அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பலி

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பலியானது.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு பலி
Published on

மணமேல்குடியை அடுத்த கொள்ளுத்திடல் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான மாடு நேற்று அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதனை மிதித்த மாடு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com