கருப்பாநதி அணை மதகில் விழுந்த காட்டெருமை மீட்பு

கருப்பாநதி அணை மதகில் விழுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கருப்பாநதி அணை மதகில் விழுந்த காட்டெருமை மீட்பு
Published on

கடையநல்லூர்:

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடையநல்லுர் வனச்சரகம், கடையநல்லுர் பிரிவு கிருஷ்ணாபுரம் கிழக்கு பீட் கருப்பாநதி அணையில் உள்ள சிறிய மதகில் காட்டெருமை ஒன்று தண்ணீர் குடிக்க சென்று தவறி விழுந்தது. அதன் பின்னர் வெளியில் செல்ல முடியாமல் தத்தளிப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள், கடையநல்லூர் வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகனின் உத்தரவுப்படி கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனவர் முருகேசன் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு துறை நிலை அலுவலர் ஷேக் அப்துல்லா மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், வனக்காப்பாளர்கள் விரைந்து சென்றனர். கருப்பாநதி மதகில் தத்தளித்த காட்டெருமையை பத்திரமாக மீட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு விரட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com