பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு

பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது.
பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
Published on

பொள்ளாச்சி அருகே குள்ளேகவுண்டனூர் வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பி.ஏ.பி. கால்வாயில் ஒருவர் பிணமாக மிதப்பதாக ஆழியாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், பூசாரிபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துக்குமார்(வயது 35) என்பதும், அவர் பி.ஏ.பி. கால்வாயில் குளிக்க சென்றபோது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com