கிணற்றில் தத்தளித்த மிளா மீட்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே கிணற்றில் தத்தளித்த மிளா மீட்கப்பட்டது.
கிணற்றில் தத்தளித்த மிளா மீட்பு
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைபட்டியில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் மிளா தவறி விழுந்து உயிருக்கு போராடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்படி வனவர் பிரபாகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், சுதாகர், மனோஜ் ஆகியோர் சென்றனர். அங்கு சுமார் 3 வயதுடைய பெண் மிளா உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த அவர்கள் உடனடியாக மிளாவை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஆம்பூர் பீட் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com