கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கடையம் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த மான் மீட்பு
Published on

கடையம்:

கடையம் அருகே அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுக வடிவு என்பவருக்கு சொந்தமான கிணற்றுடன் கூடிய வயல் தோட்டம் கடனா குடியிருப்பு பகுதியில் உள்ளது.

இந்த கிணற்றில் மான் குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின்படி வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தத்தளித்த மான் குட்டியை பத்திரமாக மீட்டு, சிவசைலம் வாளையார் பீட் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com