

சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு சேர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டிருப்பார்கள். அதன் மூலம், மக்கள் இவ்வளவு பெரிய பாதிப்புக்கு உள்ளாகாமல் காத்திருக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.