சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு


சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்கள்  நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு
x

கோப்புப்படம்

சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி 8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு) புதிய அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்கள் நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து கடந்தாண்டு வெளியிட்ட அரசாணையில் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story