

திருச்சி,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து வருகிற 23-ந்தேதி. 30-ந்தேதி, ஜூன் மாதம் 6-ந்தேதி, 13-ந்தேதி ஆகிய நாட்களில் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்:- 06059) மறுநாள் காலை 11.15 மணிக்கு போடிநாயக்கனூரை சென்றடையும். இந்த ரெயில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6.20 மணிக்கு வந்து 6.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மறுமார்க்கத்தில், போடிநாயக்கனூரில் இருந்து வருகிற 24-ந்தேதி, 31-ந்தேதி, ஜூன் மாதம் 7-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய நாட்களில் (ஞாயிற்றுக்கி ழமை) மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்:- 06060) மறுநாள் காலை 6.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரெயில் திருச்சிக்கு இரவு 9.20 மணிக்கு வந்து 9.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, பேராளம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கு கிறது என்று திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.