ரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் நலமுடன் உள்ளார் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை
Published on

சென்னை,

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ். சென்னை வந்திருந்த இவர், ரிசர்வ் வங்கி குடியிருப்பில் நேற்று தங்கி இருந்தார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தற்போது நலமுடன் உள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அசிடிட்டி காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் உள்ளார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com