ஊரப்பாக்கம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஊரப்பாக்கம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
ஊரப்பாக்கம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
Published on

மழைநீர் தேங்கியது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், வண்டலூர், கொளப்பாக்கம் கண்டிகை, காரணைப்புதுச்சேரி, மற்றும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் 11 மணிக்கு மேல் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை செல்லும் வழியில் பெருமாட்டுநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் மழை நீர் தேங்கியது.

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இதே போல ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகதீஷ் நகர் பகுதியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டது.

இதனால் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com