

தொட்டியம், ஆக.3-
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட 14-வது மாநாடு தொட்டியத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் மாநிலத்துணைத் தலைவர் முகமது அலி, மாநில செயலாளர் சுவாமி நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் தொட்டியம்- லாலாபேட்டை காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும், விவசாய பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கறவை மாட்டுக்கு வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள், மகளிர் அணி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.