சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: இது முதல் முறை அல்ல.. 5-வது முறை!

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஏற்கனவே 4 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு, மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே, 4 முறை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதாவது, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது, 2014-ம் ஆண்டு டிசம்பர் 5, 2015-ம் ஆண்டு மார்ச் 27 ஆகிய தேதிகளில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதியும், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது 2022-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 5-வது முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com