மதுரையில் இன்று முதல் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு

9-ந்தேதி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்டவற்றில் எந்த சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரில் இன்று முதல் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மதுரையில் கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகு ரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இலகுரக சரக்கு வாகனங்கள் மதியம் 12.30 மணி முதல் 3.30 மணி வரையிலும், இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 9-ந்தேதி நான்கு மாசி வீதிகள் உள்ளிட்டவற்றில் எந்த சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மதுரை மாநகரில் வாகனங்களுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com