மதுப்பிரியர்களே தெரிஞ்சுக்கோங்க... தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு

சட்டசபை தேர்தலை முன்னிட்டு மது வகைகளை விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுப்பிரியர்களே தெரிஞ்சுக்கோங்க... தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு
Published on

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், உள்நாட்டு, வெளிநாட்டு மது வகைகள் குவாட்டர் (180 மி.லி.), ஆப் (750 மி.லி.), புல் (750 மி.லி.) பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பீர், ஒயினும் விற்கப்படுகின்றன.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு மது வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர், மது கடை பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மது விற்பனை, முழு கணினிமயமாக்க திட்டம் வழியே தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு ரசீதில், 4.50 லிட்டர் இந்தியாவில் உற்பத்தியாகும் மது வகைகள், 7.80 லிட்டர் பீர், 4.50 லிட்டர் வெளிநாட்டு மது வகைகள், 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றுக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது. இதை பணியாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருவருக்கு ஒரு ரசீதில் 25 குவாட்டர் அல்லது 12 ஆப் அல்லது 6 புல் பாட்டில் மது வகைகளையும், 12 பீர் பாட்டில்களையும் வழங்க முடியும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com