அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அரசு அலுவலகங்களில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு
Published on

சென்னை,

அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலம் இந்த வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கான கழிப்பறைகள் இல்லாவிட்டால் அங்கு உடனடியாக கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com