ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலி

நாங்குநேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலியானார்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலி
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி குமரன் தெருவைச் சேர்ந்தவர் சப்பானி (வயது 72). இவர் நாங்குநேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாங்குநேரி பைபாஸ் சாலையில் உள்ள நிலத்தில் நேற்று காலை விவசாய பணிக்கு சென்றார். பின்னர் சாலையை கடந்து வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கா மோதி சம்பவ இடத்திலேயே சப்பானி இறந்தா. தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் விரைந்து சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com