நெல்லையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி படுகொலை

ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றிய நெல்லை டவுண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி
நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை டவுண் காட்சி மண்டம் அருகே ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாகீர் உசைனின் உடலை கைப்பற்றிய நெல்லை டவுண் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுள்ளநிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காவல் நிலையம் மற்றும் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story






