

பாபநாசம் வங்காரப்பேட்டை அரையபுரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வகுமரன் (வயது54). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி பேஸ்டை(விஷம்) சாப்பிட்டுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமரன் இறந்தார். இதுகுறித்து செல்வகுமரன் மனைவி சுபத்ரா (43) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, ஏட்டு காளிதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.