இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் - உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
Published on

சென்னை,

தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதிஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.

இரட்டைமலை சீனிவாசன் சாலை

தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினார்கள். தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com