பட்டாவில் பிழையை திருத்த ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்

திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்
திருவாரூர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தனக்கு சொந்தமான இடத்தின் பட்டாவில் உள்ள பிழையை திருத்த தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஆனால், பிழையை திருத்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி, வருவாய் முதுநிலை ஆய்வாளர் (ஆர்.ஐ) ஜான் டைசன் (வயது 29) கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்வகனேஷ் இது குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதையத்து போலீசின் ஆலோசனைபடி, செல்வகணபதிவு ரசாயனம் பூசிய பணத்தை நேற்று ஜானிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய ஜானை கையும் களவுமான பிடித்தனர். இதையடுத்து ஆர்.ஐ. ஜான் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், (29) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.






