பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.56 கோடி வருவாய்

திண்டுக்கல் மாவட்டம் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3.56 கோடி வருவாய்
Published on

திண்டுக்கல்,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் தங்கம், வெள்ளி மற்றும் சுமார் ரூ. 3.53 கோடி பணம் காணிக்கையாக பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி, முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும், கோவில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பழனி மலை கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவிலின் உண்டியல் திறந்து எண்ணப்பட்டன இதில் மொத்தமாக ரூ. 3.கோடியே 56 லட்சம் பணமாக கிடைத்துள்ளது.

மேலும் 576 கிராம் தங்கம், 8 கிலோ 886 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com