

சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிப்படி அரசு துறைகளில் பணியாற்றும் வருவாய்த்துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றுபவர்களையும், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களையும் கடந்த மாதம் 25-ந்தேதிக்குள் பணி இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் வருவாய் துறை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் சில சந்தேகங்கள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வருவாய் துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.