வருவாய்த்துறை அலுவலாகள் காத்திருப்பு போராட்டம்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலாகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை அலுவலாகள் காத்திருப்பு போராட்டம்
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் கடந்த 2019-ம் அண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோருக்கு முதுநிலை பட்டியல் படி பதவி உயர்வு வழங்கக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள், தட்டச்சர் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டா மெர்சி ரம்யாவிடம் கோரிக்கை தொடர்பாக எடுத்துரைத்தனர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் அறிவிப்பு வரும் வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com