

நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 17-ந்தேதி தொடங்கினர். குமரி மாவட்டத்தில் 350-க்கும் அதிகமான வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதன் காரணமாக தாலுகா அலுவலகங்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வருவாய்த்துறை பிரிவுகள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.