நீவரத்து அதிகரிப்பு எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்வரத்து அதிகரித்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
நீவரத்து அதிகரிப்பு எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து சீரான பிறகு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.நீர்வரத்து அதிகரித்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com