திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: பள்ளிக் கல்வி ஆணையர் அதிரடி அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: பள்ளிக் கல்வி ஆணையர் அதிரடி அறிவிப்பு
Published on

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைதைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வுத்துறை இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றத்த அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே வெளியான அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com