மின்கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை

மின்கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை விடுக்கப்பட்டது.
மின்கட்டண உயர்வை திரும்பப்பெற கோரிக்கை
Published on

திருச்சி மாவட்ட வியாபார கழகத்தின் 94-வது பேரவை கூட்டம் வியாபார கழக அலுவலகத்தில், தலைவர் ஜே.ஜே.எல்.ஞானராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரேன்சன்தாமஸ் ஆரோக்கியராஜ், செயலாளர் ஜார்ஜ்ராய், இணைச்செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் கே.டி.தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். வைகை அதிவிரைவு ரெயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்த திருநாவுக்கரசர் எம்.பி.க்கும், தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவிப்பது. திருச்சி-பெங்களூரு, பெங்களூரு-திருச்சி பகல்நேர விரைவு ரெயில் சேவையை நடைமுறைப்படுத்த தென்னக ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கடிதம் எழுதுவது, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அனைவரையும் சிறு, குறு நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, மின்கட்டண உயர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். மின் கட்டண கணக்கீட்டை மாதா மாதம் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், நிதியமைச்சர், மின்துறை அமைச்சரை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com