முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்
Published on

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப் பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் கூடுதல் தலைமை செயலாளர் ச.விஜயகுமார், நிதித்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் த.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், வணிக வரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும், மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டமும் அடுத்தடுத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அந்தந்த துறைகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com