வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றுங்கள்" - ஓபிஎஸ் முறையீடு

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்றுங்கள்" - ஓபிஎஸ் முறையீடு
Published on

சென்னை,

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த அலுவலகத்திற்கு யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுதாக்கல் செய்திருப்பதாகவும். இந்த் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு நாளை ஏற்றுக்கொள்வதாக கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இதே விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. அதில், வருவாய்க்கோட்டாட்சியரின் உத்தரவை ரத்துசெய்து சீலை அகற்ற உத்தரவிடக்கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேட்டுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பான மனுதாக்கல் நடைமுறைகள் முடிந்தால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இந்த வழக்கின் நடைமுறைகள் முடிந்தால், நாளை இரு தரப்பினரின் வழக்குகளும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com