நூறு நாள் வேலை அட்டையில் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்க - முத்தரசன்

விவசாயத் தொழிலாளர் நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
நூறு நாள் வேலை அட்டையில் ஆதார் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்க - முத்தரசன்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்கள் அவர்களது வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என நிர்பந்தித்து, கடந்த 31.12.2023 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்து விட்டது எனக் கூறி லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கும் பேராபத்தை உருவாக்கியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு தனிநபர் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும், அரசின் திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும் விவசாயத் தொழிலாளர் நலனுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டிப்பதுடன், நூறு நாள் வேலை அட்டையில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com